2025ம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைகள் எதிர்வரும் 17ம் திகதி முதல் 26ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்களில் தவறுகள் காணப்பட்டால், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பதிவுசெய்து, திருத்தங்களை மேற்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 10ம் திகதி நள்ளிரவு 12 மணிவரை விண்ணப்பதாரிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் , பாடசாலை அதிபர்களினூடாக அதனை மேற்கொள்ள முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.









