இந்தியாவுக்கெதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்தும் கைப்பற்றிய நிலையில், தொடரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்றைய தினம் இந்தூரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றது.
ட்ரைல் மிச்செல் 137 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஹர்டீப் சிங் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 338 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 296 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. விராத் கோஹ்லி 124 ஓட்டங்களை பெற்று ஒருநாள் போட்டிகளில் தனது 54 சதத்தை பூர்த்திசெய்தார். நித்திஷ் குமார் ரெட்டி 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ்டியன் கிளார்க் , ஷக் போக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாகவும், போட்டித்தொடரின் நாயகனாகவும் ட்ரைல் மிச்செல் தெரிவுசெய்யப்பட்டார்.









