இன்று (16) இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படவுள்ள நிலையில் பால் தேநீர் விலையைய குறைக்க முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனசும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும், 400 கிராம் பக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









