ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி அழிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான ஹங்குராங்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









