மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியிலேயே குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









