புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்போவதில்லையென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
‘சுநடிரடைனiபெ ளுசi டுயமெய’ வேலைத்திட்டத்தின் கீழ் அனர்த்தம் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணித்தல் ஆரம்ப நிழ்வு இன்று (09.01.2026) அநுராதபுரத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன. அர்த்தமற்ற காரணங்களை முன்வைத்து கல்வி மறுசீரமைப்பை நிறுத்துவதற்கு பாரிய முயற்சிகள் இடம்பெறுகின்றன. யார் என்ன சொன்னாலும் புதிய கல்வி மறுசீரமைப்பை நிறுத்தப் போவதில்லையென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.









