லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
எதிர்காலத்தில் மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப மற்ற உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
#LitroGas #TeaPriceDrop #RestaurantOwnersAssociation #SriLankaNews #ConsumerRelief









