ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளை உடல், உள ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் குழந்தைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள், குழந்தை துஷ்பிரயோகத்தின் கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்கக் கூடிய குற்றமாகும்.
எனவே அவ்வாறு செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.









