நேபாளத்தின் கோஷி ஆற்றுப்படுகையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 384 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் அதிகளவான வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவே வெள்ள அனர்தத்திற்கு காரணமென ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் ஹெலிகொப்டர்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.









