நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.









