Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நுவரெலியா கிரகரி வாவியின் அழகில் மறைந்திருக்கும் ஆபத்து..

ஆவணி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
நுவரெலியா கிரகரி வாவியின் அழகில் மறைந்திருக்கும் ஆபத்து..

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.

காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது.

மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.

இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும்.

இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்

முந்தைய செய்தி

பூனாகலை நவோதயாகம வீடமைப்பு திட்டம் நாளை மறுதினம் திறப்பு

அடுத்த செய்தி

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
அதிவேக நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து நெரிசல்

அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check