மீன்பிடி மற்றும் நீரியல்வள கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் செனரத்ன இன்று இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் மீன் சந்தைப்படுத்தல் மையங்களை நிறுவுவதற்கும் , பராமரிப்பதற்கும் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாத குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித செனரத்னவின் சகோதரரான மஹீல் செனரத்ன, 2010 முதல் 2012 வரை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.









