இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தீர்மானித்துள்ளது.
இலங்கையின் வர்த்தகம், முதலீடு மறறும் கைத்தொழில் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கொள்கைக் கடன் திட்டத்தின் கீழ் இந்நிதியுதவி, வழங்கப்படவுள்ளது.
அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர், மத்திய கிழக்கு நெருக்கடியினால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கான மேலதிக நிதியுதவியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ் வர்த்தக அமைப்புகளை நவீனமயமாக்குதல், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகளின் போட்டித்தன்மையை உயர்த்துதல், பொருளாதார வலயங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகப் பல சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இச்சீர்திருத்தங்கள் ஊடாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாஹிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு இலங்கை பொருளாதாரம் சிறப்பாக முகங்கொடுக்கும் திறன் வலுவடையும் என ADB சுட்டிக்காட்டியுள்ளது.









