Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரிக்கு சிறைதண்டனை

ஆடி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த  விஜேசிரிக்கு சிறைதண்டனை

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் பேரில், குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வழக்கு   பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே,  சமிந்த விஜேசிறி எம். பி க்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரது சாரதி பந்துல ரத்நாயக்க மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரான ரசிக கருணாதிலக ஆகியோருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொட்ஸ்கி, சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளிலும், பொலிஸ் உத்தியோகத்தர் ரசிக கருணாதிலக மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது சாரதி பந்துல ரத்நாயக்க ஏற்கனவே மரணம டைந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் பண்டாரவளை நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது குழுவினர் ஜீப் வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது வாகனத்தை ஒரு பொலிஸ் ஜீப் முந்திச் சென்றது.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அடுத்த செய்தி

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
காணாமல் போனோர் தொடர்பில் கதைக்க ஜெனீவா  செல்லும் அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அமைச்சர் ஹர்ஷன

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check