நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 104 FOTON Metro பஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அது தொடர்பான நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதற்கமைய புதிய பஸ்கள் இலங்கை முழுவதும் நவீன, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செயற்பாடானது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் மற்றொரு முக்கிய மைல்கல் எனவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் FOTON நிறுவனம் தெரிவித்துள்ளது.









