சீரற்ற காலநிலையினால் நாட்டின் 8 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை காணப்படுவதாகவும், 2 மரணங்கள் பதிவாகியுயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களின் 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 475 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீரற்ற காலநிலையினால் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு 180 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றர் அளவிலும்இ தெரணியகலை பகுதியில் 122 மில்லிமீற்றர் அளவிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.









