சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 6,245 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விலை 2,500 ரூபாவாகும்.
எவ்வாறெனினும் இந்த மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5kg சமையல் எரிவாயு கொள்கலன் விலை ரூ. 4,765
5kg சமையல் எரிவாயு கொள்கலன் விலை ரூ. 1,910
2.3kg சமையல் எரிவாயு கொள்கலன் விலை ரூ. 890









