இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பெற்றோல் கொள்வனவுக்கான QR குறியீட்டு முறை நடைமுறைக்கு வருவதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நடைமுறையிலிருந்த கோட்டா அளவு மீண்டும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த 11ம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR குறியீட்டு நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் QR குறியீட்டு முறையுடன் ஒற்றை , இரட்டை இலக்க நடைமுறையும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.









