நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு மத்திய பஸ்தரிப்பிடம் பொதுமக்கள் பாவனைக்கென நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது.
இரண்டு முனையங்களைக் கொண்ட புதிய பஸ் தரிப்பிடத்தில் கீழ்த்தளம் பஸ் தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வறைகளை கொண்டதாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாக நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 60 வருடங்களுக்கும் மேலாக புனர்நிர்மாணிக்கப்படாமலிருந்த கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சுமார் 424 மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படையின் ஒத்துழைப்புடன் பஸ்தரிப்பிடம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.









