ஈரான் – அமெரிக்கா போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் நெருங்கியுள்ளது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக 5 நாட்கள் யுத்த நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எனினும் ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவரும் நிலையிலேயே யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லையென ஈரான் அறிவித்துள்ளது.
மேலும் தமது நாட்டின் மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும்வரை போர் நடவடிக்கை தொடருமென ஈரான் அறிவித்துள்ளது.
யுத்தத்தால் ஈரானுக்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு, தம்மீதான தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாதென உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும்.
இவை நிறைவேற்றப்படும்வரை போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லையென ஈரான் அறிவித்துள்ளது.









