மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை ஏற்படாதென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு 30000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் ஒரு கப்பல் தற்போது மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் மற்றொரு கப்பல் மார்ச் 17 அன்று மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் இலங்கையின் உத்தரவுகளின்படி மாலைத்தீவுக்கு வந்து, அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிறிய கப்பல் மூலம் எரிவாயு நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லையென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.









