தாய்லாந்திலுள்ள பாடசாலையொன்றில் 18 வயது இளைஞரொருவர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலையிலிருந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் பணயக்கைதியாக குறித்த இளைஞன் தடுத்து வைத்திருந்ததாகவும், துப்பாக்கி பிரயோகத்தின்போது 3 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசாரும், பாதுகாப்பு படையினரும் , பாடசாலையில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிதாரி சரணடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.









