அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.
வளமான தேசம், அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டவகையில் , தற்போது நடைமுறையிலுள்ள 1977 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியச் சட்டமானது, புதிய சட்டத்தின் ஊடாக ரத்துச்செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வாரம் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறாதெனவும்,
அரசியல் , மக்கள் சேவையாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.









