விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, முன்னோடித் திட்டமாக இச்சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 10 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பஸ்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
குறித்த பஸ்களின் இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான வசதிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் குறித்த 10 பே பஸ்களையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.









