காசாவில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 23 ற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் வடபகுதி , தென்பகுதியிலுள்ள தற்காலிக கூடாரங்கள் மற்றும் ரபா வெளியேற்றல் வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் குறித்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோளாயர்கள் மற்றும் காயங்களுக்குள்ளானவர்கள் வெளியேறுவதற்காக ரபா வழித்தடம் திறக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலிலுள்ள போதும், இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக பலஸ்தீன மக்கள் குறிப்பிடுகின்றனர்.









