6ம் தர ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை வைத்து புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டாமென கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தரம் 06 ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
யார் தவறிழைத்தது, அதன் நோக்கம் என்ன என்பதும் விசாரணைகளின் பின்னர் பகிரங்கப்படுத்தப்படும் என்றும், எந்த வகையிலும் இந்த பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.









