மெக்சிகோவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வு 500க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரேரோவில் உள்ள சான் மார்கோஸ் நகருக்கு அருகிலுள்ள பசிபிக் கடற்கரை ரிசார்ட்டான அகாபுல்கோவிற்கு அருகில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது.
இதனால் அகாபுல்கோவைச் சுற்றியும், மாநிலத்தின் பிற நெடுஞ்சாலைகளிலும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக மாநில சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.









