2025 ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை எதிர்வரும் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய பரீட்சை தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய சுற்றறிக்கை இன்று (02) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி 12ம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை , ஜனவரி 20 ஆம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக நாடு முழுவதும் பரீட்சை மையங்கள் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் வழக்கமான நடைமுறையின் படி நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை மையங்களுக்குச் செல்லும்போது தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் புதிய அட்டவணையின் விபரங்கள் சுற்றறிக்கை மூலம் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படுமெனவும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.








