இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சசாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (28) அதிகாலை குறித்த இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
குறித்த இந்திய மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.









