பெருவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.2 மெக்னிடியூட் அளிவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருவின் வடக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.









