சுனாமி பேரழிவு அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்பட்டது.
35 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்தப் பேரழிவையும், அதன் பின்னர் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
அதற்கமைய இன்றைய தினம் பிரதான நினைவு நிகழ்வு காலி,பெரலிய சுனாமி நினைவிடத்துக்கு அருகில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
அத்துடன் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில், இன்று முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளைஇ மாவட்ட ரீதியாகப் பல்வேறு சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.









