அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ் வண்டியொன்று வீதியை விட்டுவிலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
சேருநுவர, மஹிந்தபுர சந்திக்கருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த பஸ்வண்டி வீதியை விட்டுவிலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பஸ் வண்டியில் 21 பயணிகள் பயணித்துள்ளனர்.
அவர்களில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.









