கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் தடம் புரண்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரயிலை தடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. விரைவில் ரயில்சேவை வழமைக்கு கொண்டுவரப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.









