2026 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டமே தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீவிர பேச்சுவார்த்தைகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி, 14 நாட்களுக்குள் புதிய வரவு செலவு திட்டம் கொழும்பு மாநாகர சபையின் ஆளும் தரப்பினரால் சமர்ப்பிக்க வேண்டும்.









