போதைப்பொருள் விநியோகம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், (20) நேற்றைய தினம் 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 16 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.
17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து 637 கிராம் ஐஸ் போதைப்பொருள், 285 கிராம் ஹெரோயின்போதைப்பொருள், 3 கிலோகிராம் 432 கிராம் கஞ்சா செடிகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








