மாவட்டத்தின் முக்கிய நகரமான காத்தான்குடியில் புனரமைக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டிடம் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்காகப் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வதிவிடக் கட்டிடம் ஆகியன (21) பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வப் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் (IP) நாலக்க அமரக்கோனின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு பொலிஸ் மரியாதையுடன் கூடிய அணிவகுப்பு மற்றும் கலாசார முறைப்படியான வரவேற்பு வழங்கப்பட்டதுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசிகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தமிழ் கலாச்சார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.







