Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

நேபாளத்தில் அமைதியற்ற நிலை

முன்னாள் பிரதமரின் மனைவரி எரித்துக்கொலை

புரட்டாதி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
நேபாளத்தில் அமைதியற்ற நிலை

நேபாளத்தில் தற்போது அமைதியற்ற நிலை நிலவிவருகிறது. கடந்த 8 ம் திகதி நேபாளத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதல்களால் 19 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அந்நாட்டில் பொதுசொத்துக்களை அழித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டம் காரணமாக நேபாள பிரதமர் கே. பீ. சர்மா ஒலி மற்றும் ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் ஆகியோர்
பதவி விலகியுள்ளனர். அத்துடன் நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் தாக்கி வீதியில் துருத்திச்சென்றுள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேபாள ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் மற்றும் பிரதமர் கே.பீ ஒலியின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவிஇ தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அர்ஜு ராணா தியூபா ஆகியோரையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். நேபாள முன்னாள் பிரதமரின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமரின் மனைவி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் சர்வதேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேபாளம் முழுவதும் அரச கட்டிடங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதோடு, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் நேபாளத்தின் மேற்கு மாவட்டத்திலுள்ள இரண்டு சிறைச்சாலைகளிலிருந்து 900 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நேபாள இராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

முந்தைய செய்தி

நேபாளத்திலிருக்கும் இலங்கையர்கள் குறித்து கவலை வேண்டாம்

அடுத்த செய்தி

ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம்

ஆவணி 10, 2026
சாகர காரியவசத்திற்கு பிணை
அண்மைய செய்திகள்

சாகர காரியவசத்திற்கு பிணை

ஆவணி 10, 2026
இஷாரா செவ்வந்தியை இன்று நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
அண்மைய செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல்

ஆவணி 10, 2026
விரைவில் 5ம்  தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்..
அண்மைய செய்திகள்

இன்னும் ஒரு மாதத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

ஆவணி 10, 2026
நாட்டில்  வெள்ள அபாய முன்னெச்சரிக்கை..
அண்மைய செய்திகள்

மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

ஆவணி 5, 2026
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம்  விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஆவணி 5, 2026
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில்  புதிய சுற்றறிக்கை
அண்மைய செய்திகள்

ஹட்டன் வலய பாடசாலைகள் நாளை திறப்பு

ஆவணி 5, 2026
நாடு திரும்பினார் தங்கமகன்  ருமேஷ் தரங்க
அண்மைய செய்திகள்

நாடு திரும்பினார் தங்கமகன் ருமேஷ் தரங்க

ஆவணி 4, 2026
அடுத்த செய்தி
ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

ஆசிய கிண்ண தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது ஆப்கானிஸ்தான்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.