ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் குறித்து அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாகவே சாகர காரியவசம் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் மா அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுமக்களிடையே அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









