ஆசிய கிண்ண டி 20 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
தொடரின் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இம்முறை ஆசிய கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் அணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தமை சிறந்த தீர்மானமாகும். தமது துடுப்பாட்ட வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அது சாதகமாக அமைந்தது.
20 ஓவர்களில், 06 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணியினர் பெற்றுக்கொண்டனர். பலம் பொருந்திய ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் குறித்த 188 ஓட்டங்களை ஹொங்கொங் அணி மீளப்பெறுவது கடினமான விடயமாகும்.
189 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி, 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து, 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பங்களிப்பு வழங்கிய அப்துல்லா ஒமர்சாய் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்
இதேவேளை தொடரின் 2வது போட்டி இன்றைய தினம் இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிர் இராச்சிய அணிகளுக்கிடையில் டுபாயில் நடைபெறவுள்ளது.









