நாட்டின் பல மாகாணங்களில் இன்று , 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த பலத்த மழைக்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, நாட்டின் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடைக்கியே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.
இரவு 11.30 மணி வரை பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கான முன் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடமத்திய • வடமேல் • மேல் • சப்ரகமுவ • மத்திய • ஊவா • தென் மாகாணங்கள்
அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்கள்.
மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும். இதன்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதானமாக இருப்பதுடன், மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.









