அமெரிக்க மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருந்த நிலையில், பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தையின் முதலாம் நாள் அமர்வில் லெபனான் விவகாரம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்தனர்.
சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதிச் சொத்துக்களை விடுவிப்பது மற்றும் மசகு எண்ணெய் வர்த்தகம் மீதான அமெரிக்காவின் தடைகளில் இருந்து தற்காலிக சலுகைகளைப் பெறுவது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









