டித்வா சூறாவளியை அடுத்து ஏற்ப்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் ,அரநாயக்க பிரதேச மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுவாசம் திட்டத்தின் கீழ் 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்ட்டுள்ளன.
அரநாயக்க பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்த வைத்திய உபகரணங்களை வைத்தியசாலை நிர்வாகத்திடம் நன்கொடையாக வழங்கி வைத்ததார்.
அவற்றில் Patient Monitor 5 ம், Infusion Pump 1 ம், Syringe Pump 1 உள்ளிட்ட வைத்திய உபகரணங்கள் காணப்படுகின்றன.
வைத்தியசாலை பணிக்குழாமினருடன் சுமூக கலந்துரையாடலிலும் எதிர்க்கட்சித் தலைவர் ஈடுப்பட்டார்.









