Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சிப்பிகளின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் SLT-MOBITEL 2026 ஆண்டிற்கான நாட்காட்டி அறிமுகம்

மார்கழி 18, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
சிப்பிகளின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் SLT-MOBITEL 2026 ஆண்டிற்கான நாட்காட்டி அறிமுகம்

இலங்கையின் கரையோர மகிமையை வெளிப்படுத்தும் சிப்பிகளின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் SLT-MOBITEL 2026 ஆண்டிற்கான நாட்காட்டியை அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் கரையோரங்களின் அழகையும், கடல்சார் உயிரினங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அங்கமுமான சிப்பிகளைக் கொண்டு, SLT‑MOBITEL இன் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘Seashells of Sri Lanka,’ என்பதற்கு, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, இலங்கையின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையிலும், சமுத்திரக் கட்டமைப்பின் ஆழமான முக்கியத்துவத்தை கட்டியெழுப்புவதையும் குறிக்கும் வகையில் இந்தத் தொனிப்பொருளை தெரிவு செய்துள்ளது.

இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, SLT‑MOBITEL இன் வருடாந்த நாட்காட்டிகள் தேசத்தின் சூழல் மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பை வழங்குவதுடன், சமூகங்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் பெறுப்புணர்வை கட்டியெழுப்புவதாகவும் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பதிப்பினூடாக, சூழல் வழிகாட்டலுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தை பேணி பாதுகாப்பதற்கு பொது மக்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

கரையோரப் பகுதிகளில் காணப்படும் சிப்பிகளின் ஓடுகளை மனிதர் பல சகாப்த காலங்களாக திரட்டி அவற்றை உணவு, அலங்காரப் பொருட்கள் மற்றும் நாணயமாகக் கூடப் பயன்படுத்தியுள்ளனர். அண்மைக் காலங்களில் அவை அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் சிப்பி கைவினைப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றின் கலாசார மற்றும் பொருளாதார பாவனைகளுக்கு அப்பால், கடல்சார் சிப்பிகள் முக்கியத்துவம் வாய்ந்த சூழல்சார் பங்கினைக் கொண்டுள்ளன. கடல் நத்தைகள், கடற்கரைகள், பவளப் பாறைகள் மற்றும் மணல் நிறைந்த கடற்கரைகளில் வாழ்கின்றன, அவை விலங்குகள் மற்றும் கடற்பாசிகளை உணவாகக் கொள்கின்றன. அதேபோல், சிப்பிகள் கடல் நீரிலிருந்து plankton எனப்படும் நுண்ணுயிரிகளை வடிகட்டி உண்கின்றன. ஒன்றாக, அவை எண்ணற்ற உயிரினங்களுக்கு அடைக்கலம், உணவு மற்றும் வாழ்விடங்களை வழங்குவதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைநிறுத்துகின்றன, இதனால் கடல் வாழ்வின் நுட்பமான சமநிலையை திறம்படப் பாதுகாக்கின்றன.

2026 நாட்காட்டியில் கலையம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சிப்பிகள், புதுப்பித்தல் மற்றும் இயற்கையுடன் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்துகின்றன, இது நாட்டின் உயிரியல்பரம்பலைப் பாதுகாப்பதற்கான அதிகப் பாராட்டையும் பொறுப்பையும் தூண்டுகிறது.

புத்தாக்க கலையம்சத்தினூடாக, சூழல் விழிப்புணர்வுக்கான தனது அர்ப்பணிப்பு, சிப்பிகளின் கவர்ச்சிகரமான உலகு மற்றும் அவற்றின் சூழல்சார் முக்கியத்துவத்தை அனுபவிக்க பொது மக்களை தூண்டுவது, வாழ்விட அழிவு, கடல் மாசுபாடு மற்றும் அதிகப்படியான சேகரிப்பு ஆகியவற்றிலிருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை ஆகியவற்றை ஆராய SLT‑MOBITEL அழைக்கிறது. குறிப்பாக, பன்னிரண்டு இரட்டை ஓடுகளற்ற கடல் நத்தைகளும் (Gastropod snails) மற்றும் ஒரு இரட்டை ஓடுள்ள சிப்பியும் (bivalve clam) ஏற்கனவே இலங்கைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினங்களாக உள்ளன.

மேலும், இலங்கையின் கடல் சிப்பிகள் குறித்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை; 2020 இல் வெளியிடப்பட்ட ஒரு தற்காலிகப் பட்டியலில், குறைந்தபட்ச எண்ணிக்கையாக 73 குடும்பங்களில் 494 இரட்டை ஓடுகளற்ற கடல் நத்தை இனங்கள் (gastropod species) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 2026 ஆம் ஆண்டு நாட்காட்டி, இந்த வளமான ஆனால் பாதிக்கப்படக்கூடிய கடல் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.

2026 நாட்காட்டியில் கலைஞர்களான புலஸ்தி எதிரிவீர மற்றும் நளின் ஜயரட்ன ஆகியோரின் கலை வண்ணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான வழிகாட்டல்களை கலாநிதி. மாலிக் பெர்னான்டோ MBChB (Bristol) வழங்கியிருந்தார். இவர் வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் கடலசார் உப குழுவின் அங்கத்தவராக திகழ்வதும் குறிப்பிடத்தக்கது. அலங்கார செயற்பாடுகளை சஞ்ஜீவன் சத்யஜித் மேற்கொண்டிருந்தார். இலங்கையின் சிப்பிகளின் பரம்பலை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு மாதங்களும் அமைந்திப்பதுடன், அவற்றின் உணர்வுபூர்வமான கதையை அறிந்து கொள்ளுமாறு ஒவ்வொருவரையும் அழைத்துள்ளது.

இந்த நாட்காட்டியின் விழிப்புணர்வூட்டும் நோக்கம், கடல்சார் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான SLT-MOBITEL நிறுவனத்தின் பரந்த ஆதரவால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது. இது, நிலைபேறாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கைக்கான உரையாடலைத் தொடங்கவும் கண்டல்தாவர சுற்றுச்சூழல் அமைப்பை எடுத்துக்காட்டிய 2024 ஆம் ஆண்டு நாட்காட்டியின் பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, SLT-MOBITEL ஆனது கண்டல்தாவர மறுசீரமைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் புலமைப்பரிசில்கள் உட்பட சமூகத்தை மையமாகக் கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து பலப்படுத்தும். இந்த முயற்சிகள் அறிவுப் பரிமாற்றம், பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலின் ஒரு தொடர்ச்சியான சுழற்சியை உருவாக்கி, இலங்கையின் வளமான இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி வளர்க்கின்றன.

‘Seashells of Sri Lanka’ புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழல் நல்லிணக்கத்தை அடையாளப்படுத்துவதன் மூலம், SLT‑MOBITEL ஆனது இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தில் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் தேசியப் பெருமையை ஊக்குவித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட gastropod இன் பிரத்தியேக கலைப்படைப்பு மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மறுபக்கத்தில் வியக்கத்தக்க அறிவியல் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஆண்டு முழுவதும் நீளும் இந்தத் தொகுப்பில் பின்வரும் சிப்பி வகைகள் இடம் பெற்றுள்ளன: Rose Branch Murex (ஜனவரி), Major Harp (பெப்ரவரி), Map Cowrie (மார்ச்), Winding Stair Shell (ஏப்ரல்), Geography Cone (மே), Persian Horse Conch (ஜூன்), Reticulated Olive (ஜூலை), Perry’s Triton (ஆகஸ்ட்), Triton’s Trumpet (செப்டம்பர்), Red-Mouth Frog Shell (ஒக்டோபர்), Clover’s Lyria (நவம்பர்) மற்றும் Bull-Mouth Helmet Shell (டிசம்பர்). இந்தச் சித்திரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஆண்டு முழுவதும் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டாடும் ஒரு சிறந்த தொகுப்பாக அமைந்துள்ளன.

முந்தைய செய்தி

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை பிரதேசங்கள்..

அடுத்த செய்தி

திக்வா புயலுக்குப் பின் நாட்டை வலுப்படுத்த தொடர்ந்தும் இந்தியாவின் உதவி..

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்

இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி – 36 பேர் மாயம்!

கார்த்திகை 22, 2026
காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு
அண்மைய செய்திகள்

காத்தான்குடி பொலிஸ் நிலையம் புனரமைப்பு

கார்த்திகை 22, 2026
ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தையில் அனுமதியற்ற கட்டடங்கள் அகற்றம்!

கார்த்திகை 22, 2026
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிய நடைமுறை அமுல்
அண்மைய செய்திகள்

சைபர் தாக்குதலுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்கள இணையத்தளம்

கார்த்திகை 22, 2026
மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

மஸ்கெலியா மரேயில் லொறி விபத்து மூன்று பேர் வைத்தியசாலையில்

கார்த்திகை 22, 2026
கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
அடுத்த செய்தி
திக்வா புயலுக்குப் பின் நாட்டை வலுப்படுத்த  தொடர்ந்தும் இந்தியாவின் உதவி..

திக்வா புயலுக்குப் பின் நாட்டை வலுப்படுத்த தொடர்ந்தும் இந்தியாவின் உதவி..

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check