நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள குறித்த எச்சரிக்கை, நாளை (19) அதிகாலை 2.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கண்டி மாவட்டத்தின்
தொலுவ
உடுதும்பற
மெததும்புற
நுவரெலியா மாவட்டம்:
வலப்பனை
ஹங்குரன்கெத்த
நில்தண்டாஹின்ன , மத்துரட்ட ஆகிய பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான 3ம் மட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின்
கங்கவட்டக் கோறளை
பாதஹேவாஹெட்ட
அக்குறணை
யட்டிநுவர
தும்பனே
ஹாரிஸ்பத்துவ
பூஜாப்பிட்டிய
பஸ்பாகே கோறளை
ஹதரலியத்த
குண்டசாலை
உடுநுவர
தெல்தோட்டை
பாததும்புற
பன்வில
உடபலாத
மினிப்பே , கங்க இஹல கோறளை ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை மட்டம் 2 ன் கீழ் அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பகுதிக்கும், நுவரெலியா பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








