அமெரிக்கவின் பல பகுதிகளிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரும், அரசியல் ஆர்வலருமான 31 வயதான சார்லஸ் ஜேம்ஸ் கிர்க், நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கமைய, அமெரிக்காவின் அனைத்து கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து , அவரது நிர்வாகத்தில் கிர்க் முக்கிய பங்காற்றி வந்துள்ளார்.
அவரது மறைவு அமெரிக்க நிர்வாகத்திற்கு குறிப்பாக ட்ரம்பிற்கு பேரிழப்பு என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கிர்க்கின் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்பு பிரிவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.









