முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் , தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத்திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 02 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 29ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









