நாட்டில் போக்குவரத்து துறை குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கெதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் , ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுமென பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.









