எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கைதடி நவீல்ட் செவிப்புலன் விழிப்புலனற்றோர் பாடசாலைக்கு (Naffield school for the deaf and blind) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்காக எதிர்க்கட்சித் தலைவரினால் இரண்டு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுள் நவீல்ட் செவிப்புலன் விழிப்புலனற்றோர் பாடசாலை முதன்மையானது ஆகும். அத்துடன் வட மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை என்பது சுட்டிக்காட்டதக்கது.








