கடுவெல, ரணால பகுதியில் தனியார் பஸ்சொன்று, பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ்சுடன் இன்று பிற்பகல் நேருக்கு நேர் மோதியுள்ளது.
சம்பவத்தில் சுமார் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பஸ், கொழும்பிலிருந்து லம்புகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்சுடனே மோதியுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









