மகேந்திர சிங் டோனியை கௌரவிக்கும் வகையில் டோனி எடிஷன் சி – 3 ஏர்கிராஸ் (Dhoni Edition Citroen C3 Aircross) என்ற புதிய காரை சிட்ரோயன் (citroen) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சாதாரண சி 3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக காணப்பட்டது.
தற்போது சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த கார்களில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று காணப்படும். எனினும் 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் மாத்திரம் டோனியால் ஒட்டோகிராப் இடப்பட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும்.
இந்நிலையில் குறித்த கார்களை கொள்வனவு செய்ய டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ரேண்ட் எம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.








